Monday, May 18, 2020

என் அழகு தேவதைக்கு பிறந்தநாள்



12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி- 
குறிஞ்சியை விட அரிதாய் இந்த உலகிற்கு வந்த பெருமை  கொண்டவள் நீ!!! 
வானத்தில் இரவில் தோன்றும் அழகிய நிலவு- 
நிலவே மண்ணில் பிறந்த அதிசய நிகழ்வு நீ!!! 
காலத்தின் சுழற்சியில் கடந்து செல்லும் பல நாட்கள் - 
நீ பிறந்த இன்னாளோ நாட்களே பெருமை கொள்ளும் சிறப்பு பெற்றவள் நீ!!! 
எந்த ஒரு படிப்பிலும் இருக்கும் சிறிதளவு குறை - பிரம்மனே தன் படைப்பை கண்டு பெருமை கொள்ளும் குறையற்ற உன்னத படைப்பு நீ!!! 

அழகிற்கு எல்லாம் அழகு சேர்ப்பவள் நீ!
அழகிற்கு புதிய இலக்கணம் காட்டியவள் நீ!
சொக்க வைக்கும் சிரிப்புக்கு சொந்தகாரி நீ!
பார்பவர்களை கவர்ந்திடும் குறும்புக்காரி நீ!
செல்லமாய் கோவம் காட்டும் கோவக்காரி நீ!
அன்பாய் தூய பாசத்தை காட்டும் பாசக்காரி நீ!
சிறிய அடிகளை வைத்து செல்லும் அழகிய மலர் நீ!
கள்ளம் இல்லா வெள்ளை மனம் கொண்ட தேவதை நீ!
கவலையை மறக்க செய்யும் கனிய மொழி பேசுபவள் நீ!
எவரையும் கவரும் அழகிய விழிகள் உடையவள் நீ!
உனக்கு வாழ்த்து சொல்ல வார்த்தை தந்த என் தமிழும் நீ!
உன்னை பற்றிய கவிதை எழுத என்னை கவிஞன் ஆக்கியவளும் நீ!
ஒரு தாயே எனக்கு மகளாக பிறந்தவள் நீ!
தந்தையான போதும் உன் மடியில் தலைசாய தாய் மடி கொடுத்தவள் நீ!

இன்று பிறந்த நாள் காணும் எங்கள் குல தேவதையே!!!
பிரம்மனே கண்டு பெருமை கொள்ளும் குறையற்ற உன்னத படைப்பு நீ!
நிலவே மண்ணில் பிறந்த அழகிய பிறப்பு நீ!
இந்த இனிய நன்னாளில்
உன் எண்ணங்கள் அனைத்தும் திண்ணமாக
உன் வாழ்வில் மகிழ்ச்சி என்றும் நிரந்தரமாக
உன் செயல்கள் யாவும் செம்மையாக
உன் பாதைகள் யாவும் வெற்றியின் பாதையாக
உன்னை சுற்றிலும் நல்ல சுற்றத்தார் நிறைவாக
உன் வாழ்க்கை என்றும் ஏற்றம் நிறைந்ததாக
பரம்பொருளின் ஆசி என்றென்றும் உன்னுடனே இருக்க
உன் முகம் என்றும் புன்னகை மாறா மதிமுகமாய் திகழ
நீ எல்லா வளங்களும் நலன்களும் பெற்று தடைகள் தாண்டி சிகரம் தொட நீ என்றும் சிறப்பபுடன் வாழ்வாங்கு வாழ்வாய்!!! 

உளம் கனிந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!!


2 comments: