சிறு தீ பொறியை
ஒளியாய் கண்டேன்.
அருகில் வந்ததும் அது
தீ பொறி அல்ல
வைர ஒளி என அறிந்தேன்.
இழக்க மனம் இன்றி அதை
எனதாக ஆக்கிட நினைத்தேன்.
அதை வைத்து பொருள்
சேர்த்திட அல்ல
என் பொக்கிஷமாக
உயிர் உள்ளவரை காத்து நிற்க.
என் வைரமே
என்னிடம் வாராயோ,
இன்பம் தாராயோ,
என்னுடன் சேராயோ???
No comments:
Post a Comment