Tuesday, May 26, 2020

இனியவளே


இனியவளே!!! 
உன்னை நினைக்கையில் உள்ளத்தில் தென்றல் வீசுதடி 
என்னை அறியாமல் இதழ் ஓரம் புன்சிரிப்பு இழையோடுதடி
வாழ்வின் மீது புது நம்பிக்கை பிறக்குதடி

நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் என் தாரகையே!!! 
உன் மன சஞ்சலங்கள் யாவும் தீரும் நேரம் வந்துவிட்டதடி 
உன் துன்பங்கள் யாவும் துவண்டு ஓடும் நேரம் வந்துவிட்டதடி
உன் குறைகள் யாவும் நிறையாக மாறும் நேரம் வந்துவிட்டதடி 
உன் குழப்பங்கள் யாவும் குழம்பி ஓடும் நேரம் வந்துவிட்டதடி 

உன்னை தூற்றிவோர் முன் அடங்கா சக்தியாய் ஊற்று எடு 
உன்னை இகழ்ந்தோர் முன் வான் முட்டும் புகழ் தொடு 
உன்னை எட்டி மிதித்தவர் முன் சூறாவளியாய் அவர்களை தட்டி உச்சம் தொடு 
உன்னை தூற்றியவரை ஒரு கை பார்க்கும் துர்க்கை நீ 
உன் மேல் காட்டம் கொண்டவரை காலில் மிதிக்கும் காளி நீ 
அறிவிலார் கூறும் அறிவீன வார்த்தையை தவிர்க்கும் அம்பிகை நீ 
உன்னை சார்ந்தோரை அரவணைத்து செல்லும் அழகிய சக்தி நீ 
பாறையின் இடையே துளிர் விடும் விருட்சமாக 
பூமியின் அடியில் நிற்காமல் ஓடும் ஊற்றாக 
புவியின் விசைக்கு எதிராக வெடித்து சிதறும் எரிமலை பிழம்பாக 
கட்டிற்கு அடங்கா அணையையே பெயர்த்து சீறிப் பாயும் காட்டாறாக 
விண்ணைத்தாண்டி வீற்றி செல்லும் விண்கலமாக நீ எழுவாய், உயர்வாய், ஒளிர்வாய்!!!! 

No comments:

Post a Comment