Tuesday, May 26, 2020

அவன் விஞ்ஞானி


அணுவை பிரித்து துகளை உறித்து உயிரை உருவாக்கும் பிரம்மன் அவன்...

அணுவையே ஆட்டுவிக்கும் பூவுலகின் பரமன் அவன்....

நேர் கொண்ட பார்வை கொண்ட தீரன் அவன்... 

நேர்மறையான அணுவின் மைய கருவில் மின்னும் நேர்மின்னி (proton) அவன்...

எதிர் வினையை நேர்மறை ஆற்றலாக செயல் படுத்தும் நொதுமி (neutron) அவன்...

எதிரிகளின் எதிர் வினையை எதிர்க்கும் எதிர்மின்னி (electron) அவன்...

நவீன காலத்து கலியுக சித்தன் அவன்...

சித்தத்தையும் சித்தியில் ஆழ்த்தும் சக்தி பெற்ற சிவமயம் ஆனவன் அவன்...

காலனை காலத்தால் வெல்ல பிறப்பு எடுத்த காலதேவன் அவன்... 

மெய்யுடன் உயிரினை சேர முயற்சிக்கும் மெய்ஞானி அவன்.... 

அவன் யார் என்பதை ஒவ்வொரு வினாடியும் அறிய விரையும் விஞ்ஞானி அவன்...



No comments:

Post a Comment