கதிரவனும் ஒளி தந்து ஓய்ந்து
துயில் கொள்ள சென்றுவிட்டான்.
விண்ணோடு கொஞ்சி விளையாட
மதியும் வந்து விட்டாள்.
இறை தேட சென்ற பறவைகள் தத்தம்
கூட்டில் பெட்டையுடன் கூடி விட்டன...
ஆனால் நானோ தனிமையில்
உன் நினைவில் மூழ்கி தத்தளிக்கிறேன்.
அருகில் எவரும் இன்றி உன்
நினைவுகள் மட்டும் துணையாய்
ஏங்கி தவிக்கிறேன்...
உன் பெயரை எழுதி எழுதியே
ஓய்ந்து போனதடி என் கைகள்.
உன்னை எண்ணி எண்ணியே
ஏக்கம் கொள்ளுதடி என் நெஞ்சம்.
உன்னோடு இருந்த நொடிகளை
எண்ணி எண்ணி அது மனதை அழுத்த
அந்த நினைவுகளின் பாரம்
தாங்காமல் என் நெஞ்சம் நித்தமும்
விம்மி விம்மி வெடிக்க
விழி ஓரம் நீர் துளியும்
கன்னம் தொட்டு செல்கிறது...
உன்னை
தோளோடு தோள் சாய்த்து
விழியோடு விழி சேர்த்து
உடல் நோக உன்னை கட்டி அணைத்து
உன் மடி மீது தலை சாய்த்து
என் வலிகள் நீங்க
மனம் விட்டு அழ வேண்டும் .
உனக்காக
ஏங்கி தவிக்கிறேன்
நித்தம் காத்திருக்கிறேன்
உன்னோடு என்றும் வாழ...
No comments:
Post a Comment