Thursday, May 21, 2020

முரண்பாடு


சிக்கனம் - கஞ்சத்தனமாக பார்க்கப்படுகிறது

வன்மம் - தெரியாமல் ஆட்கொள்ளப்படுகிறது

பெருந்தன்மை - வழங்கப்பட்டதாக கருதப்படுகிறது

பேராசை - லட்சியமாக பார்க்கப்படுகிறது

அன்பு - சுலபத்தில் கிடைப்பதாக கருதப்படுகிறது

அழகு - வெளித்தோற்றத்தில் மட்டும் பார்க்கப்படுகிறது

காதல் - காமத்தின் கதவாக பார்க்கப்படுகிறது

காமம் - மலிவானதாக பார்க்கப்படுகிறது

கருணை - விளம்பரமாக பார்க்கப்படுகிறது

கண்ணியம் - தேவையற்றதாக பார்க்கப்படுகிறது

பண்பு - மரியாதையற்று பார்க்கப்படுகிறது

ஒற்றுமை - பேச்சோடு நிறுத்திக்கொள்ளப்படுகிறது

நட்பு - மற்றவரை பயன்படுத்துவதற்கு சொல்லப்படுகிறது

பாசம் - பாதத்தில் மிதிக்கப்படுகிறது

நாணயம் - நேர்மையற்று சென்று கொண்டிருக்கிறது

பகைமை - எங்கும் காணப்படுகிறது

சோம்பல் - பெரும்பாலானவரிடம் காணப்படுகிறது

அவசரம் - சுறுசுறுப்பாக பார்க்கப்படுகிறது

ஆரோக்கியம் - சுலபத்தில் சமரசம் செய்யப்படுகிறது

விழிப்புணர்வு - பேச்சுடன் நின்றுவிடுகிறது

மரணம் – நெருங்காது என நினைக்கப்படுகிறது

நன்றி 


No comments:

Post a Comment