நாட்டை காக்க
பிறந்த ஊரை விட்டு
நண்பர்கள் உறவுகள் விட்டு
குடும்பம் விட்டு
வளர்ந்த வீடு விட்டு
மனைவி பிள்ளைகள் விட்டு
எல்லை சென்று
எமது எல்லையை காக்கும்
எல்லை சாமி நீ !!!
இரவு பகல் பாராமல்
பனி மழை பாராமல்
உணவு தூக்கம் பாராமல்
காடு மலை பாராமல்
பாலைவனம் ஆனாலும்
சீரும் கடல் நடுவே ஆனாலும்
காடு பனிமலை ஆனாலும்
எதையும் பாராமல்
மக்களை காக்கும்
காவல் தெய்வம் நீ !!!
பனிமலையில் பல நாட்கள்
பனிப்புயல் பனிமழையில்
இரத்தம் உறையும் குளிரில்
கடுமையான வானிலையில்
எந்த நேரமும் எல்லையில்
எதிரி வான் வழி தாங்குவானோ
தரை வழி தாங்குவானோ
என எந்நேரமும் விழித்து காக்கும்
காவல் காரன் நீ !!!
புதிதாய் மணமுடித்த தன்
மனைவியை அவள் சூடிய
மலர் வாடும் முன்னே
அழைப்பு வந்ததும்
கவலை தோய்ந்த மனதோடும்
பனித்த கண்களோடும்
ஏங்கும் அவளை
ஒருமுறை அணைத்து
நாட்டிற்கு தன்னை அர்ப்பணிக்க
எத்தனிக்கும் தேசத்தியாகி நீ !!!
பெற்ற பிள்ளைகளை வருடத்தில்
ஒரு முறை விடுப்பு
எடுத்து வந்து
கொஞ்சி விளையாடி
பின்னர் மீண்டும் எல்லை சென்று
புகைப்படத்திலும் நினைவிலும்
வைத்து மீதி நாட்களை கடந்து
எமக்காக உம் உறவு விட்டு
இரவெல்லாம் எம்மை காக்கும்
நாட்டின் நடமாடும் தெய்வம் நீ !!!
சக ராணுவ நண்பர்களின்
இறப்பை போரில் அருகில்
கண்ட போதும் அவனுக்கு
கண்ணீர் விடவும் நேரமின்றி
எதிரியை அழித்து
தாய்நாட்டை காக்கும்
ஒற்றை இலக்கை
கொண்டு வீறு கொண்டு
எழும் எரிமலை நீ !!!
எல்லையில் போர் ஆனாலும்
ஊரில் வெள்ளம் என்றாலும்
கலவரம் என்றாலும்
பூகம்பம் என்றாலும்
பேரிடர் மீட்பு என்றாலும்
தலைவர்கள் பாதுகாப்பு என்றாலும்
ரகசிய நடவடிக்கை என்றாலும்
நுண்ணுயிர் தாக்குதல் என்றாலும்
எந்த ஒரு அவசர காலத்திலும்
அசராது காத்து நிற்கும்
அஞ்சா நெஞ்சன் நீ !!!
கொரோனா காலத்திலும்
கிருமி பாதித்த தேசங்களில்
இருந்து நம் மக்களை மீட்டும்
மருத்துவ முகாம்கள் அமைத்தும்
தன்னையும் காத்து கொண்டு
பாதித்தோரை தனிமை படுத்தியும்
விமானம் மூலம் மருந்துகள் சேர்த்தும்
என மக்களை இந்த நேரத்திலும்
காத்து நிற்கும் தீரன் நீ !!!
குடும்பத்தினர் நலம் குறித்த
கவலையை விட்டு
எல்லையில் நாட்டை
காக்கும் பணியில்
இந்த கொரோனா காலத்திலும்
தன் இன்னுயிரையும்
துறந்த தொடர்ந்து
செயல்படும் நம் எல்லையின்
காவல் வீரர்கள் அனைவருக்கும்
சிரம் தாழ்ந்த வீர வணக்கங்கள் !!!
நன்றி !!!
No comments:
Post a Comment