Tuesday, May 26, 2020

கல்லறை



குழந்தை விளையாடி உடைத்த பொம்மை
பொய் சேரும் கிடங்கு பொம்மைக்கு
கொடுக்கப்பட்ட கல்லறை

நைந்து போன துணிகள்
தூக்கி எறியப்படும் போது அது துணிக்கு
கொடுக்கப்பட்ட கல்லறை

விபத்தில் சிக்கி சின்னாபின்னமான வண்டி
எடைக்கு போடப்படுவது அந்த வண்டிக்கு
கொடுக்கப்பட்ட கல்லறை

செடியில் பூக்கும் பூவின் மொட்டு,
மொட்டிலேயே கருகி விழுவது அந்த
மொட்டிற்கான கல்லறை

பட்டாம்பூச்சியாய் மாறும் பொருட்டு
புழு தனக்கே எழுப்பி கொள்வது
அதற்கான கல்லறை

சிறுவர் பருவத்தில் இருந்து
பதின் வயது செல்வது,
குழந்தை பருவத்திற்கு எழுப்பப்பட்ட கல்லறை

மின்னஞ்சல் கைபேசி வந்ததால்
தந்தி சேவைக்கு
எழுப்பப்பட்டது கல்லறை

மரபணு மாற்றிய விதையை
பயிரிட்டதால் பாரம்பரிய விதைக்கு
எழுப்பப்பட்டது கல்லறை

உயிரோடு இருக்கும் மரத்தை வெட்டி
இறந்த மனிதனுக்கு செய்த சவப்பெட்டி
மரத்துக்கு மனிதன் செய்த கல்லறை

உயிர்நண்பன் நமக்கு துரோகம்
செய்யும்பொது நம்பிக்கைக்கு அங்கு
எழுப்பப்பட்டது கல்லறை

காதலர்கள் பிரிய நேரிடும் பொது
இதயத்தின் சாட்சியாய் மலர்ந்த
அந்த காதலுக்கு எழுப்பப்பட்டது கல்லறை

தம்பதியினர் தங்களுக்குள் உண்மை  
தவறும் பொது அந்த அற்புத உறவுக்கு
எழுப்பப்பட்டது கல்லறை

பெண்களை வன்கொடுமை செய்யும்
ஆண்கள் ஓவ்வொருவனுக்கும் அது
அவன் ஆண்மைக்கு எழுப்பப்படும் கல்லறை

சுயநலத்திற்காக நீதி தவறி, சொந்த மக்களை வதைக்கும்
அரசன்(தலைவன்) ஓவ்வொருவனுக்கும் அது
அவன் நெறிக்கு எழுப்பப்படும் கல்லறை

அரசு ஊழியர் கடமையை ஆற்ற
கையூட்டல் (லஞ்சம்) பெறுவது அவர்
நேர்மைக்கும் நாணயத்திற்கும் 
எழுப்பப்படும் கல்லறை

காசுக்காக மருத்துவத்தை விற்கும் வியாபாரி,
மக்களின் ஆரோக்கியத்திற்கு 
எழுப்பப்படும் கல்லறை

கடமையை மறந்து நேர்மை தவறும் ஆசிரியர்
அடுத்த தலைமுறையின் முன்னேற்றத்திற்கு
எழுப்பப்படும் கல்லறை

இருக்கும் வரை எல்லா ஆட்டமும் ஆடி, அடங்கி,
பின்னர் கடைசியில் மனிதன் நினைத்தாலும்
தடுக்க முடியாமல் போய் சேரும் இடம்
அவனிற்கான கல்லறை 

No comments:

Post a Comment