Monday, May 18, 2020

உன்னால் முடியும்

பழகுவதற்கு இனியவளே!!!
மென்மை பொருந்தியவளே!!!
உன் வார்த்தை கேட்கும் போது புது தெம்பு உண்டாகும்.
உன் முகம் காணும் போது மனதில் மகிழ்ச்சி ஊற்று எடுக்கும்.
உன்னுடன் பழகும் போது வாழ்வின் மகிழ்ச்சி உணரப்படம்.
உன் கனிவான சொற்கள் நம்பிக்கை ஏற்படுத்தும்.
உன் ஆறுதல் வார்த்தைகள் விரக்தியில் இருந்து எவரையும் மீட்டு எடுக்கும்.
உன்னோடு என்றும் ஒரு உயிராய் பயணம் செய்ய வேண்டி மனம் நாடும்.

குணவதியே!
பவித்ரமானவளே!
இன்று ஏன் உனக்கு இந்த கலக்கம்?
ஏன் உனக்கு வாழ்வின் மீது இந்த குழப்பம்?
ஏன் இந்த தனிமை போராட்டம்?
உன் கண்ணில் ஏன் இத்தனை நீரோட்டம்?

சக மனிதன் உணர்வுக்கும் மதிப்பு அளிப்பவளே!
அழகிய சுந்தரியே!!!!
உனக்குள் இருக்கும் படைகள் உனக்காக காத்து கொண்டு இருக்கிறது
உன் தைரியம் என்னும் அடங்கா குதிரையை செலுத்தி முன்னேறு!
உன் தன்னம்பிக்கை என்னும் யானை படையை கொண்டு வீறு கொண்டு எழு!
உனது திறமை என்னும் கப்பல் படையை சோதனைகள் என்ற கடலில் எதிர்த்து செலுத்தி வெற்றி வாகை சூடு!
வான் முட்டும் நேர்மறை சக்தியும், திறமையும்** கொண்டவள் நீ!
உலகம் உள்ள வரை நிலைத்து இருக்கும் புகழை அடையும் தீரன் நீ!
எல்லோர் மனதிலும் குடி கொண்ட சொந்தத்காரி நீ!

உன்னை
இகழ்வார் இகழட்டும்
தூற்றுவார் தூற்றட்டும்
வஞ்சத்தால் வீழ்த்த முயலட்டும்

எந்த எதிர்மறை ஆயுதத்தை ப்ரயோகித்தாலும் அதை லாவகமாக கையாளும் திறமை கொண்டளே !
கலங்காதே! விம்மி வேகாதே!
பல சோதனைகளை கண்டவளே
அதை எதிர்த்து போறாடி வெற்றி பெற்றளே !
உன்னை சுற்றி நல்ல மக்களும் நல்ல வாய்ப்புகளும் உள்ளது
அதை அடையாளம் காண்.
உனக்கென ஒரு புதிய அடையாளத்தை உருவாக்கு
நீ வெற்றியின் அடையாளம்!
எழுவாய், வருவாய், மலர்வாய்,
கதிரவன் போல ஒளிர்வாய்!!!!!!


 **நேர்மறை சக்தியும், திறமையும் (positive energy, skills

No comments:

Post a Comment