Monday, May 18, 2020

உன் பேரை கேட்டாலே

உன் ஒற்றை வார்த்தை கேட்டாலே கேட்பவர்கள் காதில் தேன் பாயும்
இதயத்தில் இனிமை பிறக்கும்,
செயலில் வலிமை பிறக்கும்,
வார்த்தையில் மகிழ்ச்சி திளைக்கும்,
உள்ளத்தில் குதூகலம் பூக்கும்,
உடம்பில் சுறுசுறுப்பு கூடும்
பாலைவனம் சோலைவனம் ஆகும்,
விரக்தியில் இருப்பவருக்கு நம்பிக்கை பிறக்கும்,
கட்டுத்தரியும் கவிதை பாடும்,
நம் முகமே அழகாய் தோன்றும்,
குணத்தில் மென்மை மிளிரும்,
உலகமே அழகாய் மாறும்!!! 

No comments:

Post a Comment