அணுவாய் உருவெடுத்து பிளவுபட்டு
உயிர்த்துகள் ஆகி பலமுறை முட்டி உரசி
நட்சத்திர கூட்டமாய் உருவெடுத்து
கிரகங்களுடன்
சூரிய குடும்பத்தில் இணைந்து
பின்னர் ஆற்றல் குறைந்து கருந்துளைக்குள் சென்று
பின்னர் மீண்டும் அணுவாய் உருவெடுக்கும்
இந்த
சுழற்சி நித்தியம்
விதையாக மண்ணில் புதைந்து
வேர்
பிடித்து மண்ணில் முளைவிட்டுச்
செடியாகி கொடியாகி சில மரமாகி
காயாகி
பின் கனியாகி காய்ந்த இலைகள் சருகாகி
வேர்கள் ஆட்டம் கண்டு மண்ணில் வீழ்ந்து
மீண்டும் விதையாக பயணத்தை
தொடங்கும் சுழற்சி நித்தியம்
கருவாகி உயிராகி புலன் அறிந்து
ஸ்வாசம் அறிந்து பூமிக்கு வந்து
தவழ்ந்து பிடித்து நடந்து ஓடி வளர்ந்து பின்னர்
சமூகத்தில் திறம்பட பல புரிந்து
மனிதம் தழைக்க செய்து
மீண்டும் மண்ணுக்குள் செல்லும்
இந்த சுழற்சி நித்தியம்
அறிவால் உலகை திரும்ப செய்தாலும்
அழகால்
எதையும் செய்ய முடிந்தாலும்
உலகையே தன வசம் கட்டிப்போட்டாலும்
அனைவரும் தன் ஆளுமைக்கு அடிபணிந்தாலும்
கால ஓட்டத்தின் சுழற்சியிலே
எவராயினும் இந்த மேடையை விட்டுவிலக வேண்டிய
இந்த விதி நித்தியம்
கண்ணோடு கண் மோதிம்
மனதால் பல கதைகள் பேசியும்
காதல் ரசம் சொட்ட சின்ன குறும்புகள் செய்தும்
ஒருவர் இன்றி மற்றொருவர் இல்லை என்றபோதும்
விதி வசத்தால் பிரிய நேரிட்டாலும்
வைத்த காதல் என்றுமே நிஜம்
இது வாழ்வின் நித்தியம்
நல்லவர் வஞ்சகத்தால் வீழ்வதும்
அறம் பிழறாதவர் அடக்கப்படுவதும்
ஊருக்கு
உழைத்தவரை உருக்குலைய செய்வதும்
உண்மையை
தீமை ஆட்கொள்வதும்
தொடர்ந்து நடந்து வருவது – ஆனால்
எந்த
காலத்திலும் தர்மமே வெல்லும்
இதுவே ப்ரபஞ்சத்தின் நித்தியம்.
எதுவுமே
நிலை இல்லாத இந்த பூமியில்
மாற்றம்
ஒன்றே மாறாது என்பதே
எக்காலத்துக்கும்
பொருந்தும் நித்தியம் !!!
No comments:
Post a Comment