Tuesday, May 26, 2020

என்னில் வந்தவள்



தாகத்தில் தவித்தவனுக்கு 
நீராய் வந்தாய்! 
வழி தேடி தொலைந்த போது 
வழியாய் வந்தாய்! 
வலியில் துடித்த போது 
மருந்தாய் வந்தாய்! 
கண்ணீரில் நனைந்த போது துடைக்கும் 
விரலாய் வந்தாய்! 
துவண்டு விழும் போது தாங்கும்
தோளாகளாய் வந்தாய்!
உறங்கும் போது இனிய 
தாலாட்டாய் வந்தாய்!
பசித்த போது ருசியான 
உணவாய் வந்தாய்!
பயத்தில் உறைந்த போது 
அணைக்கும் கரங்களாய் வந்தாய்!
வாழ்வில் விழும் போது பிடித்து 
காக்கும் கரங்களாய் வந்தாய்!
என்னை எனக்கே எடுத்து காட்டும்
 கண்ணாடியாய் வந்தாய்!
பாலைவனமாய் இருந்த என் 
வாழ்வை சோலைவனமாய் மாற்ற
நீயே வந்தாய்!
என் வாழும் காலங்களில் 
என் வசந்த காலமாய் 
நீயே வந்தாய்!
நான் வீழ்ந்த போதெல்லாம் 
என் ஆபத்பாந்தவளாய் 
நீயே வந்தாய்!
நான் எழும் போது மட்டும் 
என்னை தவிக்க விட்டு 
ஏனடி சென்றாய்!!!!


No comments:

Post a Comment