Sunday, May 17, 2020

ஆன்மீகம்


 



உன்னைப்போல உயிர்கள் பல இவ்வுலகில் உண்டு

அதை கண்டு கொண்ட மானிடா !

உயிரில், சிறிது என்ன பெரிது என்ன

எல்லாம் ஒன்று தானடா - என்று

உயிர் தத்துவம் விளங்க

சொன்னது ஆன்மீகம் தானடா

 

முற்பகல் நீ செய்யும் பாவம்

அது பிற்பகலில் விளையுமடா

நியூட்டனின் மூன்றாம் விதியை அன்றே

சொன்னது ஆன்மீகம் தானடா

 

பத்து அவதாரத்தில் முதல் அவதாரம்

மத்ஸ்ய(மீன்) அவதாரம் தானடா

முதல் தோன்றிய உயிரினம் மீன் என்ற

டார்வின் கோட்பாட்டை அன்றே

சொன்னது ஆன்மீகம் தானடா

 

கும்பத்திற்க்கு பூஜை எதற்கு என்று

வினவி வந்த மானிடா !

கும்பம் எல்லாம் இடிதாங்கி என்ற

விஞ்ஞானத்தை நமக்கு அன்றே

சொன்னது ஆன்மீகம் தானடா

 

கோவில் பல எதற்கு என்று

கேள்வி கேட்ட மானிடா !

கோவில்கள் யாவும் ஒரு தற்சார்பு வாழ்க்கை

என்று நமக்கு அன்றே

சொன்னது ஆன்மீகம் தானடா

 

திருவிழாவும் கோவில் நிகழ்வும் எதர்க்கு

என்று நகையாடிய மானிடா

சுற்றுலாதுறைக்கு விதை இட்டது

இந்நிகழ்வுகள்தான் என்று நமக்கு அன்றே

சொன்னது ஆன்மீகம் தானடா

 

பல கடவுள் கோட்பாடு எதர்க்கு

என்று சொன்ன மானிடா

அனைத்துமே கடவுள் என்று எளியவரும்

புரிந்து கொள்ள நமக்கு அன்றே

சொன்னது ஆன்மீகம் தானடா

 

 உருவ வழிபாடு எதற்கு என்று

பகுத்தறிவு பேசிய மானிடா

உருவமாகி அருவமாகி அதையும்

கடந்தவன் இறைவன் என்று

சொன்னது ஆன்மீகம் தானடா

 

இந்த பிறப்பு எடுப்பதற்கு முன்

நீ யாரு என்று சொல்லடா

பிறப்பின் ரகசியம் விளங்க

வைக்கும்

ஆன்மீகம் தானடா

 

இறந்த பின்பு நீ செல்லும் பாதை

எது? எங்கு என்று சொல்லடா

ஜீவ தத்துவம் விளங்க

வைக்கும்

ஆன்மீகம் தானடா

 

மாளிகை துறந்து புத்தன் ஆனதும்

சிறையில் பிறந்து கிருஷ்ணன் ஆனதும்

பிறப்பே இன்றி சிவம் ஆனதும் - என்று

இவை அனைத்தையும் போதித்தது

ஆன்மீகம் தானடா

 

எந்த மதம் ஆயினும் - அது

சொன்ன கருத்து  ஒன்று தான்

போதித்தவர்களை வணங்கும் மானிடா - அவர்கள்

போதித்ததையும் செயல் படுத்திப் பாரடா

 

இதை நீயும் அறிந்து கொண்டால்

கடவுள் யார் என்பது தெரியும்

உனக்குள்ளேயே இருப்பது கடவுள்

தெய்வம் நீயே என்பது புரியும் !!!!!

 

 

 

 

 

 

 

 

 


No comments:

Post a Comment