உன்னை நெருங்கி உன் விழியோடு
விழி பார்த்த நெருக்கத்தில்
நான் உணர்ந்து கொண்டது
இந்த பிரபஞ்சத்தில் ஏற்பட்ட
முதல் மகா வெடிப்பு!!! (big bang)
என் கரம் நீண்டு உன்
கரம் பற்றிய நெருக்கத்தில்
நான் உணர்ந்து கொண்டது
என் ஒவ்வொரு அணுவிலும் பாய்ந்த
பிரபஞ்சத்தின் நேர்மறை ஆற்றல்!!!
உன் விரலோடு விரல்
கோர்த்த நெருக்கத்தில்
நான் உணர்ந்து கொண்டது
என்னுள் நிகழ்ந்த வேதியல் மாற்றம்
காலத்தையும் கடந்து தேட வைக்கும்
உன் உறவை!!!
உன் ஸ்வாச காற்று என்
மீது பட்ட நெருக்கத்தில்
நான் உணர்ந்து கொண்டது
என்னை சுண்டி இழுக்கும் உன்
எல்லையற்ற ஈர்ப்பு விசை!!!
உன்னை தொட்டு உன்
ஸ்பரிசம் உணர்ந்த நெருக்கத்தில்
நான் உணர்ந்து கொண்டது
பால் வெளி மண்டலத்தின் பல கோடி
நட்சத்திரங்களின் சிமிட்டும் சிரிப்பு!!!
உன் முத்த மழையில் நான்
மொத்தம் நனைந்த நெருக்கத்தில்
நான் உணர்ந்து கொண்டது
இருவது லட்சம் ஆண்டுகள் இடைவிடாது
பூமியில் பெய்த மழையின் குளிர்ச்சி!!!
உன்னை இறுக பற்றி
இறுக்கி அணைத்த நெருக்கத்தில்
நான் உணர்ந்து கொண்டது
மனிதன் பரிணாம வளர்ச்சியை போல
பன்மடங்கு வளர்ந்த, நம் மீது
நாம் கொண்டிருக்கும் காதல்!!!
உந்தன் நெருக்கத்தில் என்னை
பிரபஞ்சத்தை உணர வைத்த
என் மனதிற்கு இனியவளே!!!
நீயே இந்த பிரபஞ்சத்தின் ஈடு-இணை
இல்லா எல்லையற்ற சக்தி!!!!!
No comments:
Post a Comment