மனிதரில் பல வகை உண்டு
அவரவர்க்கு ஒரு குணம் உண்டு
ஓருவர் போல ஒருவர் இலர் - ஆயினும்
நாம் அனைவரும் மனதால் ஒருவர்.
நீ முகமது ஆன போதும்
நான் மகேசன் ஆன போதும்
நாம் இருவரும் ஒரு தாயின் பிள்ளைகள்
இந்த பாரத தாயின் தனிப்பெரும் பிள்ளைகள்.
கிறிஸ்து பிறந்த நாள் ஆயினும்
மஹாவீரர் பிறந்த நாள் ஆயினும்
அவை கூறிய விடயம் ஒன்றே
அது மானுடம் தழைக்கட்டும் நன்றே.
உனது வேர்
பாரசீகம்/ஐரோப்பா ஆன போதும்
எனது வேர்
சிந்து சமவெளி ஆன பொதும்
நூற்றாண்டு
பல கடந்தும் நானும் நீயும் ஒன்றானோம்
நம் காலம்
கடந்தும் நம் சந்ததி நன்றாவோம்.
கணேச
ஊர்வலத்தில் இஸ்லாமியர் உணவு அளிப்பதும்
ரமலான்
திருநாளில் ஹிந்துக்கள் இனிப்பு அளிப்பதும்
நாம்
மதசார்பற்ற தேசம் என்பதற்கு எடுத்துக்காட்டு
இதை
நீயும் இந்த உலகிற்கு உரக்க சொல்லிக்காட்டு
நம்மை
பிளவு படுத்த கயவர் பலர்
சந்தர்ப்பம்
தேடும் போதும்
களவு
செல்ல விடமாட்டோம் எங்கள்
மனிதநேயத்தை
ஒரு போதும்
சாதியின்
பெயரால் சண்டைகள் பல
நம்மை ஆட்டுவிக்கும் போதும்
துயரம்
துடைப்போம் தவிப்போர்க்கு
அவர் எந்த
சாதி ஆன போதும்.
பதவிக்காக
ஒருசிலரின் குள்ளநரி வஞ்சகம்
நம்மை
வேர் அருந்தாலும்
விட
மாட்டோம் வஞ்சகம் தழைக்க - நமக்கு
கையறுநிலை
வரும் போதும்.
பெருவெள்ளம்
வந்து எங்கள் வாழ்வை புரட்டி போட்டாலும்
புரட்ட
முடியாது எங்கள் மதத்தை தாண்டிய நட்பை
ஆழிப்பேரலை
பொங்கி வந்து எம்மை அழிக்க வந்தாலும
அழிக்க
முடியாது என்றும் உள்ள எங்கள் மனிதநேய பண்பை
கயவர்
கலகங்களை தோற்றுவித்து குளிர் காயலாம்
மதம்
பிடித்தவர் மதவெறி கொண்டு மிதிக்கலாம்
வஞ்சகர்
நமக்கு நயவஞ்சகம் செய்யலாம்
துரோகிகள்
நம்ப வைத்து நயமாய் கவிழ்க்கலாம்
நம்
வரலாறை மறக்க செய்து நம்மை இகழலாம்
நம்
ஒற்றுமைக்கு களையாய் முளைத்து நம்மை அழிக்கலாம்
ஆனாலும்
என்றும் அழியாது எங்கள் மண்ணின் மாண்பு
நாம்
அனைவரும் ஒருமனதாக வேரறுக்க வேண்டியது இந்த சாதியினை
பிரிவை
ஏற்பட்டும் பிரிவினைவாத சாதி
கலகம்
ஏற்படுத்தும் கலகக்கார சாதி
மதவெறிக்கு
மனிதத்தை கொலை செய்யும் மிருக சாதி
புனிதம்
கெடுக்கும் பொய்யர் சாதி
திண்ணை
விட்டு வலைத்தளத்தில் சாதி பேசும் கயவர் சாதி
மானுடம்
அழிக்கும் எவரையும் நம் ஒற்றுமையால் அழிப்போம் !!!!!
மனிதம்
செழிக்கும் மரபுவழி கல்வியை மீட்டெடுப்போம்
பொய்
புரட்டு இல்லா நல்ல சமூகத்தை மீட்டெடுப்போம்
அடுத்தவரை
அழிக்காத நல்ல பண்பை மீட்டெடுப்போம்
நம்
ஒவொருவருக்கும் வேறுபட்டவராயினும் - வேற்றுமையில்
ஒற்றுமை
காக்கும் நல்ல தேசத்தை மீட்டெடுப்போம்
சாதி மதம்
தாண்டிய புதிய பாரதம் படைப்போம்
நமக்கென
நல்ல ஒரு புதிய வரலாறை படைப்போம் !!!!!!
ஜெய்
ஹிந்த் !!!!
No comments:
Post a Comment