வீழ்வதும் நன்றே
மழையாய் வீழ்ந்து
பூமியை சிரிக்க செய்தால் !
நிலையாமையும் நன்றே
ஆறாக பாய்ந்து
ஓடும் இடமெல்லாம் செழிப்படைந்தால் !
அறுபடுதலும் நன்றே
நெற்கதிராக மக்கள்
யாவர்க்கும் உணவாய் இருந்தால் !
மண்ணில் புதைதலும் நன்றே
விருச்சமாக உயர்ந்து
பூமிக்கு நன்மை செய்தால் !
உதிர்ந்து விழுதலும் நன்றே
பழைய இலையாய் உதிர்ந்து
புதிதாய் மீண்டும் முளைத்தால் !
பின்னால் செல்வதும் நன்றே
கடல் அலையாய் மீண்டும்
முழுமூச்சுடன் கரையை அடைந்தால் !
வீசப்படுவதும் நன்றே
காற்றாய் வீசி உயிர்களுக்கு
எல்லாம் உயிர் அளித்தால் !
கரைவதும் நன்றே
சர்க்கரையாய் கரைந்து
பிறர் வாழ்வை இனிக்கச்செய்தால் !
ஆவியாவதும் நன்றே
கடல்நீராய் ஆவியாகி கார்முகிலாய்
மீண்டும் பூமியில் துளியானால் !
முடிவு என்று சொல்லப்படுவது யாவும் முடிவல்ல
அவையாவும் அழகின் மற்றொரு உறுவம்
வேறொரு வடிவின் ஆரம்பம் !!!!
நன்றி !!!
No comments:
Post a Comment